12 கோடி பெறுமதியான வாகனங்கள் கொள்ளை - அரசியல் வாதியின் மகன் கைது
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினருக்கு உரி பல்லேகம தெரகமுவே வீட்டுக்கு பின்புறமாக உள்ள, வாகனம் திருத்தும் நிலையத்தில் வைத்தே, ஜீப் வண்டிகள் இரண்டு கைப்பற்றப்பட்டன.
வத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெங்கல்ல பிரதேசத்தில் வாகன விற்பனை நிலையத்தில் இருந்து டிப்பெண்டர் ரக வாகனங்கள் இரண்டு, கேடிஎச் வான் கொள்ளையடிக்கப்பட்டது. அதில், இரண்டு டிப்பெண்டர் ரக வாகனங்களும் சிசிமல்வத்த பிரதேசத்தில் உள்ள வாகனங்கள் திருத்தும் இடத்திலிருந்து வத்தேகம பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வாகன விற்பனை நிலையத்துக்கு வியாழக்கிழமை (29) அதிகாலை வேளையில் உள்நுழைய ஐவர் அடங்கிய கொள்ளைக் கோஷ்டியினர். அங்கிருந்த காவலாளியை கட்டி வைத்துவிட்டு, சுமார் 12 கோடி பெறுமதியான வாகனங்கள் மூன்றை கடத்திச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், அஸ்கிரிய பொலிஸ் நாய் தலைமையகத்தில் இருந்து மோப்பநாயக் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. அது கைகூடவில்லை. எனினும், வத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவ்விரு வாகனங்களும் மீட்கப்பட்டன.
அந்த டிப்பெண்டர்கள் இரண்டையும் துண்டுத்துண்டுகளாக கழற்றுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த போதே மீட்கப்பட்டன. அங்கிருந்த இருவர் மற்றும் வாகன திருத்தும் நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு வாகனத்தை தேடி, கெங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment