Header Ads



கட்டுநாயக்காவில் பிடிபட்ட 11 கோடி ரூபா பெறுமதியான தங்கம்


பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான 5.650 கிலோ கிராம் தங்கத்துடன் ஐந்து பயணிகளை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இன்று (27) கைது செய்துள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.


இதன்போது சென்னைக்கு செல்லவிருந்த பயணிகள் மறைத்து வைத்திருந்த ஜெல் வடிவில் தயாரிக்கப்பட்ட 15 கேப்சூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மொத்த எடை 5650 கிராம் மற்றும் தோராயமாக 107 மில்லியன் ரூபா பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் சுங்கம் தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.