Header Ads



10 வயது மாணவி மீது பாலியல் கொடுமை, காட்டிக்கொடுத்த ஆசிரியர் - குற்றவாளிகள் யார்..?


கொழும்பில் உள்ள பிரபல மகளிர் பாடசாலையில் கல்வி கற்கும் 10 வயது மாணவியை 8 தடவைகள் வன்புணர்வு செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று (22.06.2023) நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.


இந்நிலையில் பாதிப்புக்களான சிறுமி இந்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதற்கமைய சிறுமியை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கையில் சிறுமி வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.


குறித்த சிறுமியின் மருத்துவ அறிக்கையை கருத்தில் கொண்ட நீதிமன்றம் சிறுமியை அவரது தாயின் பாதுகாப்பில் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது.


கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்ட சிறுமியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கவனித்த வகுப்பு ஆசிரியர் சிறுமியை வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.


இதன்படி, சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பரிசோதித்தபோது போது, சிறுமி 8 முறை பாரிய வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.


சிறுமியின் உடலின் சில பாகங்கள் சிகரெட்டினால் சுடப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் தடயவியல் மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பின் பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனின் பெயர் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பாடசாலை மாணவர்கள் அனைவரையும் அழைத்த போது சந்தேகநபரை அடையாளம் காட்ட சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எனினும் குறித்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.