Header Ads



பிரான்ஸ் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிய இஸ்லாமிய அறிஞர், தனது 106 ஆவது வயதில் காலமானார்

- தமிழில்:M.சிராஜுத்தீன்அஹ்ஸனி - 

வட ஆப்ரிக்காவிலே அல்ஜீரியாவின் சமகால உலகில் ஒரு முக்கிய சுன்னத் வல் ஜமாஅத் அறிஞரும் மற்றும் இஸ்லாமிய போதகரும்,  மேலும் அல்ஜீரியா ஃபத்வா கவுன்சிலின் தலைவரும், பிரெஞ்சு ஆக்கிரமிப்பிற்கு எதிரான விடுதலைப் புரட்சியின் நாயகர்களில் ஒருவருமான ஷேக் முகமது தாஹிர் ஆயத் அஜலத் 


நேற்று (2023/ஜூன்/14 - 1444 AH/Dulqa'd/25)  (முஸ்தபா பாஷா) மருத்துவமனையில்  106 வயதில் இவ்வுலகை விட்டும் பிரிந்தார்.. 


நவீன அல்ஜீரிய முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கு மகான் அவர்களின் வாழ்க்கை ஒரு சான்றாக இருக்கிறது.. 


அவர் மாலிக் மத்ஹபின் மார்க்க சட்டத்துறையில் உலகின் முதன்மையான அறிஞராக இருந்தார், மேலும் ஆன்மீகத் துறையிலும் தனது பிரகாசமான தனிப்பட்ட முத்திரையைப் பதித்தார்.  

மகான் ஷாதுலி தரீக்காவின் ஷெய்காகவும் விளங்கினார்... 

அவர் பிப்ரவரி 7, 1916 /  முஹர்ரம் 5, 1334 AH இல் அல்ஜீரியாவின் சம்கரா கிராமத்தில் அய்தல் குடும்பத்தில் பிறந்தார்.  


அவர் தனது 11வது வயதில் தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் திருக்குர்ஆனை மனனம் செய்தார்.  அதன் பிறகு, முதன்மையான சமயப் படிப்புகள் நாட்டின் புகழ்பெற்ற அறிஞர்களின் கீழில் கற்றுத் தேர்ந்தார்.  அவர்களில் ஷேக் சாலிஹ் அவுகாசி, ஷேக் முஹன்னத், ஷேக் அலி தையிப் மற்றும் ஷேக் தையிப் யதுர்கி ஆகியோர் அடங்குவர்.


பின்னர் 12 வயதில், அல்ஜீரியாவின் முக்கிய அறிஞர்களான ஷேக் லஹ்லுல் கியாரி மற்றும் ஷேக் சயீத் யாஜ்ரி ஆகியோரிடம் 4 ஆண்டுகள் படித்தார்.  பின்னர், அவர் வாதி உஸ்மான் என்ற இடத்தில் உள்ள மத நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஷேக் மிஸ்பாஹ், ஷேக் முஹம்மது,  ஷேக் மஹ்மூத் கரீபாஃ, ஷேக் சயீத் யஃலாவி, ஷேக் அஹ்மத் பஸ்கரி  மற்றும் பலர் அங்கே முதன்மை பேராசிரியர்களாக விளங்கினார்கள். 


இந்த காலகட்டத்தில், அவர் ஃபிக்ஹ், அரபு இலக்கணம், இலக்கியம், வரலாறு, புவியியல், கணிதம் போன்ற அறிவுத் துறைகளில் நிபுணத்துவம் பெற்றார்.

20 வயதில் படிப்பை முடித்து வீடு திரும்பினார்.  பின்னர், 1937 இல்,தனது தாத்தா நடத்தி வந்த நன்கு அறியப்பட்ட மார்க்க நிறுவனத்தை வெற்றிகரமாக கொண்டு வந்து அங்கு அவர் பேராசிரியர் பணியில்  நுழைந்தார்.  

அவரது வருகையால் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள்  அங்கே குவிந்தனர்.

ஆகஸ்ட் 1956 இல், பிரஞ்சு ஆக்கிரமிப்பை முஜாஹிதீன்கள் வெற்றிக் கொண்ட போது முஜாஹிதீன்கள் அணியில் சேர்ந்து சிதி யஹ்யா அல் ஈதிலியுடைய தலைமையில் மற்ற மாணவர்களுடன்  அவர் அல்ஜீரியப் புரட்சியில் பங்கேற்றார், 

கி.பி.1957-ம் ஆண்டின் இறுதியில் தனது ராணுவப் படைப்பிரிவில் நீதித்துறைப் பதவியை வகித்த கர்னல் அமிரூஷின் உத்தரவின் பேரில் துனிசியாவுக்குச் சென்று பல சர்ச்சைகளையும் தீர்த்தார்.  

பின்னர் அவர் லிபியாவின் திரிபோலிக்கு சென்றார், அங்கு அவர் விடுதலை முன்னணி அலுவலகத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அவரது அறிவுப்புலமைப் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்த நேரத்தில் 1948 இல் பிரெஞ்சு வீரர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றி நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளுடன் வந்தனர்.  

பல சீடர்களும், நேசர்களும் அதை எதிர்க்க பல யுக்திகளை வகுத்தாலும், அதற்கு நான் அடிபணிவேன் என்று புன்னகையுடன் பதில் அளித்தார்.  

அவர் அளவுக்கு அதிகமாக பொறுமையை கடைப்பிடித்தார், நிம்மதியான மனதுடன் நாடு கடத்தும் முடிவை ஏற்றுக்கொண்டார்.  

அதனால் சதுக்கின் புறநகர்ப் பகுதியில் சையத் சைத் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தில் ஓராண்டு தங்கினார்.  பின்னர் அவர் 1954 மற்றும் 1962 க்கு இடையில் பிரெஞ்சு ஆக்கிரமிப்பிற்கு எதிரான விடுதலைப் புரட்சியில் சேர்ந்தார்.

ஆயுதப் போராட்டத்தில் இணைந்த நேரத்தில், விடுதலைப் படையின் ஷரீயத் காஜியாக நியமிக்கப்பட்டார். 1962 இல் சுதந்திரத்திற்குப் பிறகு அல்ஜீரியாவுக்குத் திரும்பிய அவர் முக்கியமான மத நிறுவனங்களில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.  

நீண்ட ஆசிரியப் பணிக்குப் பிறகு  1978ல் ஓய்வு பெற்றார். அல்ஜீரிய முன்னாள் அவ்காஃப் மந்திரி மௌலூத் காசிம் உட்பட பலர் இவரது சீடர்களாக உள்ளனர்... 

1. تسجيل صوتي لشرحه لرسالة ابن أبي زيد القيرواني.

2. تقريظ لكتاب ملتقى الأدلة الأصلية والفرعية الموضحة للسالك فتح الرحيم المالك تأليف الشيخ محمد باي بلعالم إمام ومدرس بأولف، ولاية أدرار.

3. مختارات سلسلة شرح الموطأ.

4. شرح ترتيب الفروق.

5. شرح متن الرحبية .

6. شرح كتاب الرسالة لابن أبي زيد القيرواني رحمه الله

7. شرح متن الرسالة إلى باب الضحايا.

போன்ற சுமார் ஏழு நூல்களை எழுதியுள்ளார்.

அவர் மரணிக்கும் வரை தனது வக்கீல் பணியிலும் புத்தகங்கள் எழுதுவதிலும் ஈடுபட்டதுடன் ஃபத்வாக்கள் மீதான அரசாங்கக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

 அவர் கப்ர் ஈசாத் எதிர் மக்பராவில்தான் உள்ளது.

வல்லோன் அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தில் உயர்ந்த தரஜாக்களை வழங்கியருள்வானாக


No comments

Powered by Blogger.