Header Ads



புல்லட் புரூப் ஆடையுடன் களமிறங்கிய ரிஷி சுனக் - 105 பேர் கைது


இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்டவிரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். 


சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார். 


இந்நிலையில், தற்போது புல்லட் புரூப் ஆடையுடன் களத்தில் இறங்கிய பிரதமர் ரிஷி சுனக் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்களை தேடிப்பிடித்து கைதுசெய்தார். 


அதிகாலையில் அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள், வணிக வளாகங்கள் என அனைத்து இடங்களிலும் அலசி ஆராய்ந்தார். இந்த தேடுதல் வேட்டையில் சட்ட விரோதமாக குடியேறிய சுமார் 20 நாடுகளை சேர்ந்த 105 பேர் கைது செய்யப்பட்டனர். 


இதனை டுவிட்டரில் பகிர்ந்த ரிஷி சுனக், இந்த நடவடிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், அப்பாவி அகதிகளை சிரமத்திற்கு ஆளாக்குவதாக எதிர்மறையான கருத்துக்களும் பலதரப்பில் எழுகின்றன.


1 comment:

  1. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், பாலர் வகுப்பு ஆசிரியையின் பணியைத் தொடர்வதைப் போல் தெரிகிறது. நாட்டின் கொள்கைகள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக பொலிஸ்காரனின் பணியைச் செய்து அப்பாவி அகதிகளுக்கு தொந்தரவு கொடுக்கத் தொடங்கினால் அது அவருடைய பதவியின் இறுதிக்கட்டத்தின் ஆரம்பம் என்பது உறுதியாகிவிட்டது.

    ReplyDelete

Powered by Blogger.