Header Ads



புதிய ஆபத்தான தொற்றுநோய் கதவை தட்டப் போகிறது - WHO எச்சரிக்கை

கொரோனா தொற்றினால்  உலகம் முழுவதும் 2 கோடி பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், அதனை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் வருடாந்த கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அறிவித்த ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அந்த தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.


புதிய பெருந்தொற்று கொரோனா பெருந்தொற்றை விட அதிக உடல் பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும் என்றார்.


கொரோனா பெருந்தொற்று இனி உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்றும்  அந்த பெருந்தொற்று மறைந்துவிடவில்லை என்றும் தொலைவில் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.


கொரோனா தொற்றத் தொடங்கியதும்  அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்கவில்லை என்றும் அதன் காரணமாக அது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது என்றும் சுட்டிக்காட்டினார்.


புதிய தொற்றுநோயும் வீழ்த்தக் கூடியதாக இருக்காது என்றும் அது நமது கதவை தட்டப் போகிறது என்றும் தெரிவித்த அவர், நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டால்  நிலைமை மோசமாகும் என்றார்.


No comments

Powered by Blogger.