புதிய வசதியை அறிமுகம் செய்யும் WhatsApp
=
பயனாளர்கள் தாங்கள் அனுப்பிய செய்திகளை திருத்திக்கொள்ளும் வசதியை WhatsApp அறிமுகம் செய்யவுள்ளது.
தாம் அனுப்பிய செய்தியை 15 நிமிடங்களுக்குள் திருத்திக்கொள்ளும் வசதியை பயனாளர்களுக்கு WhatsApp வழங்கவுள்ளது.
இந்த புதிய வசதி எதிர்வரும் வாரங்களில் 2 பில்லியன் WhatsApp பயனாளர்களுக்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மாத்திரம் 487 மில்லியன் பயனாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்ட செய்தியை Long Press செய்யும் போது தோன்றும் Edit மூலம் திருத்திக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
Post a Comment