Header Ads



WhatsApp அறிமுகப்படுத்தும் புதிய அம்சம்


மெட்டா நிறுவனம் வட்ஸ்அப்பில் புதிய அம்சமொன்றை சேர்த்துள்ளது. இது பயனர்கள் குறிப்பிட்ட அரட்டைகளை பூட்டி வைப்பதற்கு அனுமதிக்கிறது.


கடவுச்சொல் அல்லது கைவிரல் அடையாள ஸ்கேன் மூலம் இதைச் செயற்படுத்தலாம் என மெட்டா கூறுகிறது.


அரட்டை பூட்டி வைக்கப்பட்டவுடன், அதன் பெயர் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை மறைத்து, தனி கோப்புறையில் சேமிக்கப்படும் என்று மெட்டா கூறுகிறது.


இந்த புதிய அம்சம் தங்கள் அரட்டைகளை தனிப்பட்டதாக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.


இதன் காரணமாக, யார் உங்கள் கைபேசியை எடுத்தாலும், உங்களது அனுமதியின்றி, பூட்டப்பட்ட அரட்டைகளை அணுகவும் பார்க்கவும் முடியாது.


மேலும் இது வட்ஸ்அப் வழங்கும் தனியுரிமையைப் பாதுகாக்கும் தனித்துவமான அம்சம் என்றும் பலர் இதனை வரவேற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.