STF இன் சுற்றிவளைப்பில் சிக்கிய கஞ்சாவும், ஐஸ் போதைப் பொருளும்
- Ismathul Rahuman -
20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் விஷேட அதிரடி படையினரில் சீதுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் 26ம் திகதி வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்க நீர்கொழும்பு பதில் நீதிபதி அனுமதி வங்கியனார்.
சீதுவ, கஸகவத்த பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கு இணங்க விஷேட அதிரடி படையின் கோனஹேன முகாம் பொலிஸ் பரிசோதகர் தேசப்பிரிய தலைமையிலான குழுவினர் நடாத்திய சுற்றிவலைப்பில் 145 கிலோகிராம் 298 கிராம் கேரளா கஞ்சா, 20 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைபற்றப்பட்டதுடன் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். இவற்றின் தற்போதய சந்தைப் பெறுமதி 20 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றிவலைப்பின்போது பொலிஸாரை தாக்கி தப்பியோட எடுத்த முயற்சியின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடுகம்பொல, கொரஸயைச் சேர்ந்த மதுஷான் புத்திக்க, கொடுகொடயைச் சேர்ந்த இஷான் லக்ஷான் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் இருவரையும் நீர்கொழும்பு பதில் நீதவான் பிரேமலால் அமரசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போது சந்தேகநபர்கள் இருவரையும் 26ம் திகதி வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைத்து விசாரிக்க பதில் நீதவான் அனுமதி வழங்கினார்.
Post a Comment