புத்தளத்தில் ஹஜ்ஜுப் பெருநாள "MOTOCROSS" ரேஸ் - தேசிய மட்ட போட்டியாளர்களும் பங்கேற்கிறார்கள்
இதன் ஆரம்ப கூட்டம் GOLDFINCHS TOURISM நிறுவனத்தின் முன்மொழிவுடன், GOLDFINCHS TOURISM நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் M.A.M.ZUHAIR, அந்நிறுவனத்தின் முகாமையாளரும், முன்னாள் நகர சபை உறுப்பினருமாகிய M H M RASMI, திட்டமிடல் முகாமையாளர் B.M.JAHID, மற்றும் ஊடக ஒருங்கிணைப்பாளர் M.M.Caseen அத்தோடு PUTTALAM RIDERS ASSOCIATION அமைப்பின் தலைவர் MR.F M FAIROOS மற்றும் அவ்வமைப்பின் உயர்மட்ட உறுப்பினர்களோடும் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம். இப்போட்டிகளை புத்தளத்தில் சிறந்த முறையில் தொடராக நடாத்துவதற்கான முன்னேற்பாடுகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை 30/04/2023 அன்று இலங்கையில் புகழ்பெற்ற SRI LANKA AUTOMOBILE DRIVERS ASSOCIATION (SLADA) அத்தோடு புத்தளத்தின் பிரதான அனுசரணையாளரான GOLDFINCHS TOURISM (GFT) மற்றும் புத்தளத்தில் நீண்டகால அனுபவமிக்க அமைப்பான PUTTALAM RIDERS ASSOCIATION (PRA) மூன்று நிறுவனங்களும் இணைந்த ஒரு மாபெரும் நிகழ்ச்சியை நடத்துவதற்கான திட்டமிடல் கந்தையா கடற்கரை உணவு விடுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கான மைதான முன்னேற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்வதற்காக, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழில் அதிபருமான கௌரவ அலி சப்ரி ரஹீம் (ASR) அவர்களும் மற்றும் புத்தளம் நகர சபையும் UC இணைந்து மேற்கொள்ளவுள்ளது என்பதை புத்தளம் மக்களுக்கு அறியப்படுத்துவதில் பெருமிதம் அடைகிறோம்.
இது புத்தளத்தின் பெயரை தேசிய மட்டத்தில் புகழ் பெற்றுத்தருவதோடு, இலங்கை நாட்டின் பல பகுதியிலிருந்தும் மக்களின் வருகை இடம்பெறும். அத்தோடு எமது புத்தளப் பிரதேசத்தின் வர்த்தகம் மற்றும் ஹோட்டல் வியாபாரங்களும் பாரிய வருமானங்களை ஈட்டித்தரும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைவதோடு எமது உள்ளூர் ஒட்டப்பந்தைய முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தி தேசிய மட்டத்தில் பிரகாசிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் அமையும்.
இம்முயற்சி எதிர்காலத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் இலங்கை அரசாங்கம், மத்திய அரசாங்கத்தின் நிதியூடாக பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் ஒரு ஏற்பாடாகவும் அமையும்.
இது சம்மந்தமாக நேற்று 30-04-2023 அன்று இடம்பெற்ற மைதான மேற்பார்வை மற்றும் கலந்துரையாடலில் பங்குபற்றியோர்.
SLADA அமைப்பின்
MR. PRASHAN WIJENAYEKA (PRESIDENT - SLADA )
MR. RODNEY MASON (FOUNDER - SLADA )
MR. SHANE GUNAWARDENA (EVENT COORDINATOR AND COMMITTEE MEMBER - SLADA)
GOLDFINCHS TOURISM (GFT) நிறுவனத்தின்
MR. M.A.M.Zuhair - நிறைவேற்றுப் பணிப்பாளர்
MR. B.M.JAHID - திட்டமிடல் முகாமையாளர்
MR. DIKRULLA - வெளிக்கள உத்தியோகத்தர்
PUTTALAM RIDER ASSOCIATION அமைப்பின்
MR. F M FAIROOS - PRESIDENT
MR. J M RIFAS - SECRETARY
MR. A M AZEEM - TREASURER
MR. SAFNIS
ASR குழுவின்
MR. J.M.JAWSI - PERSONAL SECRETARY OF MP Hon. ALI SABRY RAHEEM
MR. H.S.NAFRAS
MR. MOHAMED NAWFAL
MR. MURAD
அத்தோடு நகர சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் MR. KAZANI ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Post a Comment