Header Ads



காலிமுகத் திடல் JVP க்கு கிடைக்காமல் போனதில், ரணிலின் வஞ்சகத் திட்டம்


கொழும்பு, காலிமுகத்திடலில் எந்தவோர் அரசியல் கூட்டமும் இசை நிகழ்ச்சியும் நடத்த முடியாது என்று ரணில் அரசு தீர்மானம் எடுத்தமைக்கு உண்மையான காரணம் ஜே.வி.பி என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


கடந்த முதலாம் திகதி இடம் பெற்ற மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடத்துவதற்குத்தான் ஜே.வி.பி. திட்டமிட்டிருந்தது.


அதற்காக ஏப்ரல் மாத ஆரம்பத்திலேயே ஜே.வி.பி. அனுமதியும் கோரி இருந்தது.


ஆனால், ஜே.பி.பியினர் காலிமுகத்திடல் முழுவதையும் நிரப்பும் வகையில் மக்களை அழைத்து வருவதற்குத் திட்ட மிட்டிருந்தனர்.


அவ்வாறு அழைத்து வந்தால் ஜே.வி.பியின் மக்கள் பலம் என்னவென்று நாட்டுக்குத் தெரிந்துவிடும்.


ஏற்கனவே ஜே.வி.பி. அரசியல் ரீதியில் சில இடங்களில் முதலாமிடத்திலும், சில இடங்களில் இரண்டாமிடத்திலும் மக்களின் ஆதரவோடு இருக்கின்றது என கூறுகின்றன.


இந்தநிலையில் காலிமுகத்திடலை அவர்கள் முற்றாக நிரப்பினால் அவர்களின் பலம் வெளியே தெரிந்துவிடும் என்று அஞ்சித்தான் அதிபர் ரணில் விக்கிரமசிங்க மேற்படி முடிவை எடுத்தார் என்று குறித்த சேடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் ஜே.வி.பியினர் மே தினக் கூட்டத்தை கொழும்பு நகர மண்டப வளாகத்தில் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.