Header Ads



குருணாகல் வைத்தியசாலைக்கு மீண்டும் Dr ஷாபி

 
- M.F.M.Fazeer -


சிங்கள தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஒழுக்காற்று விசாரணைகளில் அவர் குற்றச் சாட்டுக்களில் இருந்து விடுவித்து, விடுதலை செய்யப்பட்டார்.


இந்நிலையில், வைத்தியர் ஷாபியை மீண்டும் குருணாகல் போதனா வைத்தியசாலையிலேயே நியமனம் வழங்கி கடமையில் இணைக்க, சுகாதார அமைச்சு குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.


உடன் அமுலுக்கு வரும் வகையில் வைத்தியர் ஷாபியை இவ்வாறு குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமைகளில் இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.


Oruvan

1 comment:

  1. அநியாயமும் அட்டூழியமும் தாண்டவமாடி, தனிப்பட்ட நபர் எல்லாவகையிலும் சீரழித்து அவரைச் சிறுமைப்படுத்த திட்டமிட்டால் அதன் பின்னால் இருப்பது சர்வ வல்லமையும் ஆற்றலும், மிகப் பெரும் சூழ்ச்சிக்காரனும் அநியாயக்காரனையும், பாதிக்கப்பட்டவரையும் படைத்து பரிபாலித்து போசணை செய்யும் இறைவன் தான் பின்னால் இருக்கின்றான். அந்த இறைவனின் ஆற்றலிலும் சக்தியிலும் முற்றிலும நம்பிக்கை வைத்து பொறுமையோடும், பிரார்த்தனை மூலமும் பாதிக்கப்பட்ட டாக்டர் ஷாபி அவர்களின் நன்னடத்தை இன்று சரியான மிகவும் பூரணமான பதிலைக் கொடுத்திருக்கின்றது. அவரைச் குற்றம் சாட்டிய நிறுவனம் அவர் எந்தவித குற்றமும் செய்யாதவர் என அவரை மன்னித்தால் அந்த நிறுவனத்தில் அநியாயமாக பொய்க் குற்றம் சாட்டிய நபர்களுக்கு உரிய தண்டனை வழங்கியாக வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் நிரபாரதியானால் அநியாயமாக குற்றம் சுமத்திய குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்படும் வரை இந்த நாட்டில் பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். டாக்டர் ஷாபி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்ததனைகளும் நிச்சியமாகக் கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.