Header Ads



நெடுந்தீவிலிருந்து Dr தரிந்து சூரியராட்சியை கண்ணீரோடு வழியனுப்பிய மக்கள்


நெடுந்தீவுக்கு வைத்தியராக சென்று இனம், மதம், மொழி கடந்து அன்பால் மக்களை கவர்ந்து அர்ப்பணிப்பான சேவையாற்றிய பண்டாரகம, களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த வைத்திய கலாநிதி தரிந்து சூரியராட்சி அவர்களை கண்ணீரோடு மக்கள் விடையனுப்பி உள்ளனர்.


வைத்தியர் சேவையை பெற்றுக்கொள்வதில் தீவுப்பிரதேச மக்கள் கடந்த காலங்களில் சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளனர்.


தூரம், கடல் பிரயாணம், வசதிவாய்ப்புகளில் பின்தங்கிய நிலை காரணங்களால் விருப்போடு சேவையாற்ற வருவதில் பலரும் பின்னடிப்பர். தீவுப்பகுதியில் பிறந்தவர்களும் விதிவிலக்கல்ல.


இவ்வாறானதொரு நிலையில் பல மைல் தொலைவிலிருந்து வருகைதந்து அர்ப்பணிப்போடு சேவையாற்றுவதற்கு முன்வரும் சிலரில் குறித்த வைத்தியர் பாராட்டுக்குரியவர்.


வைத்தியர் பணிக்கு அப்பால் வெற்றிடமேற்படும் பலதரப்பட்ட வேலைகளிலும் தன்னையும் ஊழியராக ஈடுபடுத்தி சேவையாற்றியிருக்கிறார்.


இனம், மதம், மொழி,பிரதேசம் கடந்து மக்களை நேசித்து அர்ப்பணிப்பான சேவையாற்றிய வைத்தியரை பலரும் பாராட்டி வருகின்றனர். என முகநூல் வாசி Kangatharan Panchadsaram என்பவர் குறித்த பதிவை முகநூலில் பதிவிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.