தூங்கிக் கொண்டிருந்த மனநலம் குன்றிய இளைஞனை மோதி தள்ளிய CTB பேருந்து
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் இளைஞர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது.
இதில் 23 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரே உயிரிழந்தவராவார்.
இன்று சனிக்கிழமை (20.05.2023) கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்த ஏறாவூர் டிப்போவிற்கு சொந்தமான பேருந்து கல்முனையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் ஏறாவூர் டிப்போவிற்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் கிரான்குளம் விஷ்ணு கோயிலுக்கு முன்னால் தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை மோதிவிட்டுச் சென்றதாக தெரியவருகிறது.
ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி காவல் நிலைய போக்குவரத்து காவல்துறையினர் பேருந்து சாரதியை கைது செய்துள்ளதுடன் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
Post a Comment