Header Ads



இஸ்லாம் உள்ளிட்ட சமயங்களை இழிவுபடுத்திய, யுவதி தொடர்பில் CID யில் முறைப்பாடு


பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை இழிவுபடுத்திய யுவதி ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அண்மையில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு நதாஷா என்ற யுவதிக்கு கிடைத்தது.


அதன் தொடக்கத்திலிருந்தே, அவர் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.


பௌத்த பாடசாலைகள் குறித்தும் அவர் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தார்.


அந்த அறிக்கையில் அவமதிப்பு மட்டுமின்றி கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.