Header Ads



மூளைச் சாவடைந்தவர் பட்டியலில் CIA என்னை இணைக்கும், டயானா போன்று எனது மரணமும் ஏற்படலாம் - வீரவன்ச


இலங்கை தொடர்பான ‘அமெரிக்காவின் சதி’யை வெளிப்படுத்தியதன் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

>


தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய விமல் வீரவன்ச, பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் மரணம் போன்று விபத்தின் ஊடாக தனது மரணம் நிகழக்கூடிய சாத்தியம் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்த சிஐஏவைச் சுட்டிக்காட்டி, மூளைச்சாவு அடைந்தவர் எந்த விலையிலும் நிரூபிக்கப்படாத வகையில் இந்த விபத்து நடத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அமெரிக்காவிற்கு எதிரான தனது நிலைப்பாடு மற்றும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பான தனது புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.