"எந்தவித தொடர்பும் இல்லை"
தற்போது இலங்கையில் பேசுபொருள் என்னவென்றால் மதங்கள் தொடர்பில் போதகர் ஜெரோம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தும் அவர் நாட்டை விட்டு தப்பியோடியதும் தான்.
காவல்துறையினர் போதகர் ஜெரோம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு நீதிமன்றில் பயணத்தடை அனுமதியை பெற முன்னரேயே அதாவது கடந்த 14 ஆம் திகதியே அவர் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.
இந்நிலையில் அவர் தப்பியோடியதற்கு இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகளுடன் இருந்த தொடர்பே காரணம் என பரவலாக செய்திகள் வெளிவண்ணம் இருந்தன.
எனினும் மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சிம்பாவே நாட்டு போதகர் யூபேர்ட் ஏஞ்சலுடன், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தனக்கு அவர்களுடன் எந்த விதமான தொடர்பும் இல்லையெனவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் போதகர் ஜெரோமின் அலுவலகத்திலிருந்து தன்னை சந்திக்க அழைப்பு வந்ததால் ஒரே ஒருமுறை தான் அவரை சந்தித்ததாகவும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வாயைத்திறந்தால் பொய்மூட்டையைக் கக்கும் இந்த பொய்மூட்டை மற்றொரு பொய்யைக் கக்கியிருக்கின்றது. இதனை நம்புவதற்கு இந்த நாட்டில் யாருமில்லை. இதனை புலனாய்வுத்துறைக்கு விசாரணைக்கு ஒப்படைத்தாலும் பயனில்லை. அங்கும் இருப்பது இவனுடைய கையாட்கள்.நாட்டைச்சூறையாட எந்தக் கறுப்பனையாவது பயன்படுத்தி மலைமலையாக சேர்த்திருக்கும் டொலர் குவியலை வெண்மைப்படுத்தும் செயற்பாடு தொடர்கிறது.ஆனால் அவை அனைத்தும் பொதுமக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை சாப்பிட்டுவிட்டு சேமித்த பணம் அல்லது அவை பற்றி எரியும் நெருப்பு. அதனால் அவனோ அவனுடைய குடும்பமோ ஒரு சதமேனும் பயன்படுத்த முடியாது. அதுதான் கடவுள் ஏற்பாடு. அவற்றைக் கொண்டு சீரழிந்து மானம் கெட்டு அவமானடைந்து குடும்பமே அழிந்து நாசமாக வேண்டும் என கடவுளை வேண்டுவோம்.
ReplyDelete