Header Ads



வல்லரசின் உதவியுடன் சவூதிக்கு, இரகசியமாக நகர்த்தப்பட் உக்ரைன் ஜனாதிபதி


உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஜப்பானில் வந்திறங்கிய பின்னர் தான், அவர் பயணித்த விமானமானது பிரான்ஸ் ராணுவத்திற்கு சொந்தமானது என வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.


உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் நடவடிக்கைகள் அவரது நட்பு நாடுகளின் தலைவர்களையே கோபம் கொள்ள வைத்தது.


அவரது நோக்கம் தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும், பிரான்ஸ் அரசாங்கம் உக்ரைனுக்கு கணிசமான இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.


ஆனால் சவுதி அரேபியாவில் அரபு லீக்கில் உரையாற்ற சென்ற உக்ரைன் ஜனாதிபதி பிரான்ஸ் ராணுவத்தின் விமானத்திலேயே ஜெட்டா நகரம் சென்றுள்ளது, இமானுவல் மேக்ரானின் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.


பிரான்ஸ் அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவிக்கையில், G7 உச்சிமாநாடுக்கு உக்ரைன் ஜனாதிபதியை பங்கேற்க வைப்பது என்பது, ஜப்பான் நிர்வாகத்துடன் கலந்தாலோசித்த பின்னர் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட திட்டமிடல் என தெரிவித்துள்ளனர்.


ரஷ்யாவுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகளும் G7 மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலையில் உக்ரைன் தரப்பில் இருந்தே பிரான்ஸிடம் உதவி கோரப்பட்டுள்ளது.


இதனையடுத்து போலந்து எல்லையில் இருந்து உக்ரைன் அதிகாரிகள் தரப்பு பிரான்ஸ் ராணுவ விமானத்தில் ஜெட்டா நகருக்கு பறந்துள்ளனர். அங்கே அரபு லீக்கில் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, அங்கிருந்து மீண்டும் பிரான்ஸ் ராணுவ விமானத்தில் 15 மணி நேர பயணத்திற்கு பின்னர் ஜப்பான் சென்றடைந்துள்ளார்.


சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட பின்னர் தான் ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைன் அதிகாரிகள் தரப்பு தூங்கி ஓய்வெடுத்ததாக பிரான்ஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


கடந்த பிப்ரவரி மாதமும் ஐரோப்பிய தலைவர்களுடனான சந்திப்பு ஒன்றிலும் போலந்தில் இருந்து ஜெலென்ஸ்கியை பாதுகாப்பாக பிரஸ்ஸல்ஸ் கொண்டு சேர்க்கும் பணியை பிரான்ஸ் அதிகாரிகளே முன்னெடுத்திருந்தனர்.

No comments

Powered by Blogger.