நீ அமைச்சரின் விடயங்களில் வரம்பு மீறி தலையிடுகின்றாய் - டுபாயிலிருந்து இலங்கை சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல்
இலங்கையின் பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணிகளில் ஒருவரான பிரியலால் சிரிசேன என்பவரே இவ்வாறு அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
துபாய் நாட்டின் “00971566018309” தொலைபேசி இலக்கத்தில் இருந்து அழைப்பு எடுத்த மர்ம நபர் ஒருவர், ''நீ அமைச்சரின் விடயங்களில் வரம்பு மீறி தலையிடுகின்றாய். அதை உடனடியாக நிறுத்திக் கொள்வது நன்று. இல்லையேல் வீண் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். பொதுவௌியில் நடமாடும் போது கவனமாக இரு.'' என்றவாறு சட்டத்தரணி பிரியலாலை அச்சுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்டமை தொடர்பில் சட்டத்தரணி பிரியலால், 08/2022 இலக்க வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாகவே அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Tamilw
Post a Comment