Header Ads



மத மோதல்களை ஏற்படுத்த முயற்சி


இலங்கையில் சிலர் பதற்றத்தை தூண்டும் வகையில் வெளியிடும் கருத்துக்களின் பின்னணியில் அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என கொழும்பு பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது.


மதங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அண்மை நாட்களில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பின்னணியிலேயே, இல்லத்தின் ஊடக பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிருஸாந்த இதனை கூறியுள்ளார். 


இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், 


“இலங்கையில் அண்மை நாட்களில் மதங்களுக்கும் அதன் படிப்பினைகளுக்கும் எதிராக பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.


இந்த பின்னணியிலேயே, மதங்கள் தொடர்பிலான விமர்சனங்கள்  அதனை பின்பற்றும் மக்கள் மத்தியில் சீற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும்.


இந்த நிலையில், குறித்த விமர்சனங்களின் விளைவாக நாட்டில் வன்முறைகள் கட்டவிழ்க்கப்படலாம்.


இவ்வாறான மதப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்படும் கருத்துக்களுக்கு பின்னால் மோசமான அரசியல் நோக்கங்கள் இருக்கலாம்.


இது தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.