Header Ads



ரூபாவின் பெறுமதி வழமைக்கு திரும்பியுள்ளதாக தீர்மானிக்க முடியுமா..?


டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதினாலேயே நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக தீர்மானிக்க முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.


நாட்டின் பொருளாதாரத்தில் சில கட்டுப்பாடுகள் இருப்பதும், கடனைத் திருப்பிச் செலுத்துவது மட்டுப்படுத்தப்பட்டிருப்பதும் தான் ரூபாயின் மதிப்பு வலுவடைந்ததற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.


370 ரூபாயில் காணப்பட்ட டொலர் பெறுமதி தற்போது பாரிய அளவில் குறைந்துள்ளது. இலங்கையின் ரூபாயின் பெறுமதி பாரிய அளவில் வலுவடைந்துள்ளது.


சுற்றுலா பயணிகளின் வருகை, இறக்குமதி கட்டுப்பாடுகள், டொலர் வெளியேற்றத்தை தடுத்தல், கடன் செலுத்தாமை ஆகிய காரணங்கள் மாத்திரமே ரூபாய் வலுவடைய பிரதான காரணமாகும்.


இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் கடனை திருப்பி செலுத்துதல் போன்ற விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.


ரூபாயின் வலுவடைந்ததன் பயனை நுகர்வோருக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் காலங்களில் மீண்டும் டொலர் பெறுமதி அதிகரிக்கும் போது மக்கள் மீண்டும் நெருக்கடி நிலைக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.