Header Ads



ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு தகவல், எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை


மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட பொலிஸ் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.


நாட்டின் பல இடங்களில் இருந்தும் இவ்வாறான குழுக்கள் உருவாகி வருவதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டவை எனவும், தற்செயலான செயற்பாடுகள் அல்ல எனவும் ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் பிரகாரம் இந்த துரித முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் உரிய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து,   பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அலுவலக பிரதானி, தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்  சாகல ரத்நாயக்க இன்று (29) பணித்துள்ளார்.


வரலாறு காணாத பாரிய பொருளாதார ஸ்திரமின்மைக்கு நாடு முகம் கொடுத்த போது   மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து மக்களிடையே பிளவை ஏற்படுத்தி நாட்டை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மூலம் தெரியவந்துள்ளது.  


இதுபோன்ற நாசகார செயல்களை கண்காணித்து, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷயங்கள் சமூகத்தை சென்றடையும் முன்பே தடுக்கும் பொறுப்பு புதிதாக நிறுவப்பட்டுள்ள புதிய பொலிஸ் பிரிவு ஆகும் என்று தெரிவித்துள்ள  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக புதிய பொலிஸ் பிரிவு மிக விரைவில் ஸ்தாபிக்கப்படும் என்றார்.  

No comments

Powered by Blogger.