மர்ஹூம் பாக்கீர் மாக்கார் பற்றிய பதிவு
முஸ்லிம் இளைஞர்களைகளுக்காக அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணியை உருவாக்கி இளைஞா்களை ஒர் கொடையின் கீழ் கொண்டு வந்தார். அவர் இறுதிவரை இந்த நாட்டுக்கு சேவையாற்றியதுடன்
சமூகத்திற்காக தன் வாழ்க்கையை முழுமையாக அர்பணித்த ஓர் தலைவர் மறைந்த முன்னாள் சபாநாயகர் . பாக்கிர் மாக்கார்
இலங்கையில் எத்தனையோ தலைவர்கள் உருவாகி மறைகின்றனர் அதில் இன்றும மக்களால் பேசப்படும் தலைவராக போற்றப்படுபவராக மர்ஹூம் தேசமான்ய எம்.ஏ பாக்கீர் மாக்காரும் திகழ்கின்றார். அவர் இன மத மொழி பேதம் கடந்து பேசப்படும் ஒரு மகத்தான மனிதராகவே அன்னாரை நாம் பாக்கின்றோம்.
இன்று 12 மே .2023 ஆம் திகதி அன்னாரது 106 வது ஜனன தினமாகும். இன்றைய தினத்தில் அன்னாரை நினைவு கூற வேண்டிய தினமாகும்.
மர்ஹூம் பாக்கீர் மாக்கார் . அவர்கள் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முனனணி ஊடக பல சிரேஸ்ட ஊடகவியலாளர்களை ஊடகத்துறையில் கால் பதிக்க செய்தவர் என்றால் அதற்கான வழிகாட்டியாக பாக்கீர்மார்க்கார் அவர்களே இருக்கிறார். என்றால் அது மிகைப்படுத்தும் வார்த்தையல்ல
முஸ்லிகளின் ஆரம்ப குடியேற்றம் பிரதேசம் என்று பெயர் பெற்ற பேருவளை மண்ணில் புகழ் பூத்த மருத்துவத்துறை சார்ந்த பரியாரியார் எனும் வெத மகத்தயா எனும் குடும்பத்தில் 1917 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி ஹக்கீம் அலியார் மரைக்கார்யர் மற்றும் முஹம்மத் றாஹிலா உம்மா தம்பதிகளின் புதல்வராக பிறந்த பாக்கீர் மார்க்கார் சின்னவயது முதலே துடிப்பு மிக்கவராக காணப்பட்டதால் குடும்பத்தில் அனைவரதும் அன்புக்குப் பாத்திரமானவராகவே காணப்பட்டார் சிறுவயது முதலே ஆண்மீகப் பற்று மிக்கவராகவும் ஐவேளைத் தொழுகைகளையும் நேரம் தவறாமல் தொழுது வந்தார்.
ஆரம்பம் முதலே தமிழ் மொழியில் சிங்களம் , ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் ஆற்றலை வளர்த்துக் கொண்டார் பாக்கீர் மாக்கார். இளவயது முதலே பேருவளையில் மக்களின் ஆதரவுடன் சமூகப் பணிகளில் ஈடுபாடு காட்டினார்.
கொழும்பிலும் பேருவளையிலும் இளைஞர்களுடன் இனைந்து பல்வேறு அமைப்பு ரீதியில் செயற்பட்டு வந்தார்.
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் முஸ்லிம் தலைவர் ரீ.பி.ஜாயா அதிபராகக் கடமையார்த்த வேளையில் அவரது மாணவராக இருந்து பெரும் பணியாற்றியவர். பட்டப்படிப்பை முடித்த பாக்கீர் மாக்கார சட்டத்தரணியாக வெலியேறி களுத்துறை மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணியாக சேவை புரிந்த போது தம்மை நாடி வந்த சகல ஏழை மக்களின் வழக்குகளில் பணம் பெறாமல் இலவசமாகவே வழக்குகளில் வாதாடி பிரச்சினைகளைத் தீர்க்க உதவினார்.
முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்தில் அக்கரை காட்டிய பாக்கீர் மார்க்கார் தமிழ், சிங்களம் ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் கற்க வேண்டும் என்று விழிப்பூட்டினார். இனத்தின் மீது பற்றுடையவராக இருந்த போதிலும் தேசப்பற்று மிக்கவராக இளம் வயது முதல் காணப்பட்டார் சட்டக் கல்லூரி மாணவராக இருந்த காலகட்டத்தில் இரண்டாம் உலக யுத்தம் மூண்டபோது பிரித்தானியாவின் குடியேற்றமாக இருந்த இலங்கை அரசு நாட்டைப் பாதுகாக்க பாதுகாப்பு படையை நிறுவியது. சட்டக்கல்வியை முடக்கிவிட்டு தேசத்தைக் காக்கும் படையில் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்.
1960ல் அரசியலுக்குள் பிரவேசித்த பாக்கீர் மாக்கார் தனது அரசியல் பயணத்தை முஸ்லிம் சமுதாயத்தை முன்னிலைப்படுத்தி மேற்கொண்டாலும் ஒருபோதும் இனரீதியான சிந்தனையில் ஈடுபடவில்லை. இன நல்லுறவை கட்டி எழுப்புவதற்கான பயணமாகவே அவரது அரசியல் பயணம் அமைந்திருந்தது. சிங்கள மக்களின் மனங்களை வென்றெடுத்த ஒரு தலைவராக அவர் அந்த மக்கள் மனங்களில் இடம் பெற்றார். நாடு இனரீதியாக பிளவு படக் கூடாது என்பதில் அன்னார் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருந்தார். சகல இனமக்களையும் இணைத்துப் பணிபுரியும் நல்லெண்னத்தினைக் கொண்டிருந்தார்.
தன்னிடம் உதவி என நாடி வருபவர்களை இனரீதியில் பார்க்கவில்லை. யார் வந்தாலும் அவர்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அக்கரை காட்டி செயற்பட்டார் . தான் சபாநாயகராக பதவி வகித்த காலப்பகுதியில் சபாநாயகர் இல்லம் மும்தாஜ் மஹால் 24 மணி நேரமும் மக்ககள் பணிக்காக திறக்கப்பட்டு இருந்தது. 1978ல் ஜ.தே. கட்சியில் உயர் பதவியில் இருந்தபோது மகரகம கபூரியா அரபுக் கல்லூரியை தன்வசப்படுத்த கபூரியா குடும்பத்தவர்கள் முயன்ற போது அதனைத் தடுத்து நிறுத்தும் பணியை முன்னெடுத்தார்
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடம் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தினார். கபூரியா தனியார் வசம்போக இடமளிக்க வேண்டாம் எனக் கூறிய அவர் அப்படி நடந்தால் தான் அரசியலிருந்து வெளியேற தயங்க மாட்டேன் என பிடிவாதமாக இருந்து அதில் வெற்றியும் கண்டார்.
நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் வாலிபர்களை ஓரணியில் திரட்டுவதற்காக தமது காலத்தை செலவிட்டார். கிராமம் கிராமமாகச் சென்று இளைஞர்களை ஒன்று திரட்டி அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்ணனிகளின் சம்மேளனத்தை உருவாக்கினார். இந்த அணியில் பல்லாயிரம் இளைஞர்களை ஒன்றுதிரட்டி கிராமிய மட்டத்திலும் முஸ்லிம் இளைஞர்களை ஒன்றுபடுத்தினார். பின்தங்கிய கிராமங்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை அணிதிரட்டி கிராமிய அபிவிருத்திகளை முன்னெடுக்க பூரண ஒத்துழைப்பு வழங்கினார். கொழும்பு 12 புறக்கோட்டை பிரதான வீதியில் இருந்த அதன் அலுவலகத்தை தலைமைக் செயலகமாக மாற்றியமைத்தார். அங்கு தினமும் இளைஞர்களை கூட்டி திட்டங்களையும் வகுத்து செயற்பட்டனர். இளைஞர்களுடன் இணைந்து செயற்படும்போது அவரும் ஓர் இளைஞராக பரிணமித்தார். அன்னாரது அன்புப் பிணைப்புக்குள் சகல இளைஞர்களும் சங்கமமாகினார்கள்.
தனது மகன் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரையும் அந்த வழியில் நடக்க அவர் அர்பணித்தார். அதன பின்னர் பல இளம் தலைவர்களை தலைவர்கள் ஆக்கி அவர்களை வழிநடத்திச் சென்றார். நாட்டின் பல பாகத்திலிருந்தும் பல தலைவர்கள் இளைஞர் பட்டாளமொன்றையும் அவர் உருவாக்கினார்.
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் என்னை இனம் கண்டு கொழும்பிலிருந்து முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் இளைஞனாக இணைந்து இந்த வாலிப முன்னணியின் உதவிப் பொருளாளராகவும் அமைப்பாளராகவும் இயங்கி தற்பொழுதும் தேசிய உதவித் தலைவராகவும் இயங்குகி வருகின்றேன்... இப்படிப் பல உச்சநிலைக்கு உயர்வதற்கும் சமூக சேவையில் சேவையாற்றவும் இந்த முஸ்லிம் லீக் வாலிப முன்னணி எனக்கு மட்டுமல்ல பலருக்கு களம் அமைத்துக் கொடுத்துள்ளது.
இந்த வாலிப முன்னணியின் ஊடாக இன நல் உறவை வளர்ப்பதற்கு.,இளைஞர் தலைமைத்துவ பயிற்சிகள், முஸ்லிம் சமூகத்தில் அவ்வப்போது ஏற்படும் அரசியல் ,மத, இன,கல்வி, மொழி மற்றும் முஸ்லிம் கலாச்சார விவகாரங்கள் நாட்டின் அவ்வப்போது எற்படுத்தப்படுகின்ற அரசியலமைப்பு சட்ட மாற்றங்கள் , பாதுகாப்பு போன்ற பல சமூகப் பிரச்சினைகளை கூடி ஆராய்ந்து உரியவர்களுக்கு தெளிவுபடுத்தி அதற்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
மறைந்த பாக்கீர் மாக்கார் பேருவளை நகர சபை,உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர், சபாநாயகர் இறுதியாக தென் மாகாண ஆளுனராகவும் தமது சேவையை இந்த நாட்டு மக்களுக்காகச் சேவையாற்றியுள்ளார். அவர் சபாநாயகராக பதவி வகித்த காலகட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் பிரதமர் ஆர்.பிரேமதாசாவும் வெளிநாடு சென்றிருந்தமையால் ஒரு இரு நாட்கள் சபா நாயகர் பாக்கிர் மாக்கார் பதில் தலைவராகவும் இந்த நாட்டில் இருந்தமை ஓர் வரலாறாகும்.
எமது நாளைய சந்ததியினர் மறைந்த தலைவர் பாக்கீர் மாக்காரைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். அவர் பற்றிய வாழ்க்கை வரலாறுகளை நன்கு தேடி படித்து தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அவர் பற்றிய வரலாறுகள் பற்றிய நுால்கள் தமிழ் மொழியில் கொண்டுவரப்படல் வேண்டும்.
முஸ்லீம்களுக்கான தனியார் தேசிய பத்திரிகையொன்று குறித்து அன்னார் கனவு கண்டார். அந்தக் கனவு நனவாகப் படவில்லை. வாலிப முன்னணி ஆரம்பத்தில் உதயம் ; ஆங்கிலத்தில் டோன் என இரண்டு பத்திரிகைகளை தனது சொந்தச் செலவில் அன்னார் வெளியிட்டார்.
இன்றைய 106வது பிறந்த தினத்தில் அன்னாருக்காக அனைவரும் பிராத்திப்போம். அன்னாரது பணிகளை இறைவன் அங்கீகரித்து அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனபதியை வழங்குபவனாக (ஆமீன்)
(எம் ஷாம் நவாஸ்)
முன்னால் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்
தேசிய உப தலைவர்
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்.
Post a Comment