சிறைச்சாலை கூரைக்கு மேலேறி உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவரின் கோரிக்கை
யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்கு தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகிறது.
மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
-. பிரதீபன்-
Post a Comment