கபூரிய்யா மாணவர்களுக்கு மீண்டும் கொடுமை, வாசலுக்கு வெளியே நிர்க்கதியாக காத்திருப்பு
கல்லூரி நம்பிக்கையாளர்களுக்கு மாவட்ட நீதிமன்றின் மூலம் கிடைக்கப்பெற்ற இடைக்கால உத்தரவொன்றின் மூலம் கல்லூரியை நிர்வகிப்பதற்கான ஒரு நிர்வாகக் குழுவை உள்வாங்கி கல்லூரியை நடாத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய எஸ்.ஏ.எம்.செய்யித் ஜிஹான் மெளலானா என்பவரை அதிபராகக் கொண்ட ஒரு முகாமைத்துவ சபைக்கு கல்லூரி பாரம்கொடுக்கப்பட்டது. அவரது அறிவித்தலுக்கமைய்யவே இன்றைய தினம் மாணவர்கள் தங்களது பெற்றோர்கள் சகிதம் கல்லூரிக்கு சென்றுள்ளனர்.
எனினும் மாணவர்களை உள்வங்க வேண்டாம் என தமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் காவலாளி அறிவித்துள்ளார். நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பல சிரமக்களுக்கு மத்தியில் சென்ற பெற்றார்கள் தற்போது தங்களது மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்தும், மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் மிகுந்த அச்சத்துடனும், நம்பிக்கை அற்ற நிலையிலும் காணப்படுகின்றனர்.
எனவே முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை வக்பு சபை, முஸ்லீம் அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள், இலங்கை மனித உரிமை ஆணையம், சிவில் அமைப்புக்கள் கபூரிய்யா விடயத்திலும், மாணவர்கள் விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என வினயமாக வேண்டிக்கொள்கிறோம்.
பழைய மாணவர் சங்கம்
கபூரிய்யா அரபிக் கல்லூரி.
Post a Comment