ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் தற்போது அடிக்கடி, கோளாறு ஏற்பட காரணம் என்ன..?
தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு நேற்று இரவு 8.50 மணிக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான UL 470 என்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விமானத்தில் இருந்தவர்கள் அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 06.00 மணிக்கு விமானம் தனது திட்டமிடப்பட்ட பயணத்தை நிறைவு செய்யும் என்று விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகளினால் விமான சேவைகள் இரத்துச் செய்யப்படுவது வழமையாக மாறியுள்ளது.
இந்த விடயம் குறித்து விமானப் போக்குவரத்து நிபுணர்கள், அனைத்து பொறுப்பு வாய்ந்த துறைகளிடமும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment