"இம்ரான் கானும், அவர் கும்பலும் பயங்கரவாதிகளுக்குக் குறைந்தவர்களல்ல" - பாகிஸ்தான் பிரதமர்
இம்ரான் கானின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி வாகனங்கள் மற்றும் கட்டடங்களுக்குத் தீவைத்தனர். ராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகளை முற்றுகையிட்டு, நெடுஞ்சாலைகளை மறித்து, காவல்துறை மற்றும் ஏனைய அதிகாரிகளைக் கற்களால் தாக்கியிருக்கின்றனர். இந்த சூழலைச் சமாளிக்கப் பாகிஸ்தான் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வந்தது.
இதற்கிடையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ``அரசு சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளின் வீடுகளைத் தாக்கியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இம்ரான் கானும், அவருடைய ஆதரவாளர்களும் எந்தவொரு பயங்கரவாத அல்லது தேச விரோத குழுக்களுக்கும் குறைவானவர்களல்ல.
பல தசாப்தங்களாக வெளி எதிரிகளால் செய்ய முடியாததை இம்ரான் கானும் அவர் ஆதரவாளர்களும் செய்து முடித்திருக்கின்றனர். இந்தக் கலவரத்தில் அங்கம் வகித்த அனைவரின் செயல்களுக்கான தண்டனை, இனி இதுபோல நடந்துகொள்பவர்களுக்கு பாடமாக இருக்கும். அரசு அவர்கள் அனைவரையும் தனது காவலில் எடுத்து, அரசியலமைப்பின்படி தண்டிக்கும்.
இந்த பயங்கரவாத கும்பல் நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த அதிகாரிகளின் நினைவுச்சின்னங்கள், குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் முகாம்கள்மீது தாக்குதல் நடத்தியது, மனதை வேதனைப்படுத்துகிறது. இந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டு, செயல்படுத்திய மற்றும் மூளையாகச் செயல்பட்ட அனைவரையும் விட்டுவிடக் கூடாது என்று நான் உத்தரவிட்டிருக்கிறேன்.
அவர்கள் அனைவரையும் கைதுசெய்து அவர்கள்மீதான வழக்குகளைப் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும். இந்த சூழ்நிலையை வேறு வழிகளில் கையாளக்கூடாது. பாகிஸ்தான் அதன் ஆயுதப் படைகளுக்குப் பின்னால் நிற்கிறது, அவர்களைக் குறைத்து மதிப்பிடும் எந்தவொரு மோசமான முயற்சியையும் முறியடிக்கும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
உமது பேச்சும் உமது தோற்றமும் நீர் யாரென்பதை வாசகர்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது. உலக மக்களின் சாபத்திலிருந்து உம்மைத் தற்காலிகமாகக் காத்துக் கொள்ள இது போன்ற 'புத்திசாலித்தனமான' பேச்சைத் தவிர்ந்து கொள்வது வாசகர்களுக்கும் உதவியாக அமையும்.
ReplyDelete