போருதொட்டை ஹிமா பெண்கள், நலன்புரிச் சங்கம் நடத்திய கௌரவிப்பு நிகழ்வு (படங்கள்)
நீர்கொழும்பு போருதொட்டை பிரதேசத்தில் இயங்கி வரும் ஹிமா பெண்கள் நலன்புரிச் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (28-05-2023) அஹதியா பாடசாலைகளில் கல்வி கற்பித்த மற்றும் கற்பித்து வரும் ஆசிரியர்களை கௌரவித்தல் மற்றும் சமூக சேவையாளர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றை நடத்தியது.
இந்த நிகழ்வு நீர்கொழும்பு maple leaf ஹோட்டலில் காலை 9 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது
இந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் ஆலோசகருமான அல்ஹாஜ் எம். இஸட். எம். அஹ்மத் முனவ்வர், பாடசாலை அதிபர்கள் வைத்தியர்கள், வர்த்தகர்கள் பிரதேசத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட அதிக எண்ணிக்கையான பெண்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் அங்கு முக்கியஸ்தர்கள் பலர் உரை நிகழ்த்தினர்.
Post a Comment