பாலியல் துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் உலகின் ஒரேயொரு நாடாக மாறப்போகும் இலங்கை
மக்கள் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் பல சட்டமூலங்களை கொண்டு வந்து நிறைவேற்ற அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
இலங்கை சட்டத்தில் தன்பாலினச்சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக இருந்த போதிலும், கடந்த காலங்களில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தண்டனை வழங்குவதை காவல்துறையினர் தவிர்த்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தன்பாலினச்சேர்க்கை தொடர்பில் உலகின் ஏனைய நாடுகளில் உள்ள மனிதாபிமானமற்ற தண்டனைகள் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனவும் அரசியலமைப்பின் 365வது சரத்தில் சிறு திருத்தம் செய்வதன் மூலம் அதனை மாற்ற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த உத்தேச சட்டத்தின் மூலம் அரசியலமைப்பின் 365 (ஆ) சரத்து முற்றாக நீக்கப்பட்டு, துஷ்பிரயோகத்தை ஊக்குவிக்கும் உலகின் ஒரேயொரு நாடாக இலங்கையை மாற்றும் என்றும் அவர் கூறினார்.
சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்யும் எவரும் இந்த சட்டத்தின் மூலம் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment