பலகத்துறை கற்பாறைகளில் இருந்து சடலம் மீட்பு
- Ismathul Rahuman -
நீர்கொழும்பு கடற்கரை பூங்கா கடலில் நீராடச் சென்று கடல் அலைக்கு அடித்துச் செல்லப்பட்டவரின் சடலம் இரு தினங்களுக்குப் பின்னர் பலகத்துறை பகுதியில், கற்பாறைகளின் இடையில் சிக்குண்டிருந்த நிலையில் மீட்டுள்ளனர்.
கடந்த 16 ம் திகதி மாலை 3.00 மணியளவில் கடற்கரைக்கு வந்த நால்வர் கடலில் இறங்கு நீராடியுள்ளனர். இதில் ஒருவர் கடல் அலைக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
பிரதேச வாசிகள் மற்றும் பொலிஸார் நடாத்திய தேடுதலில் இரு திணங்களுக்குப் பின்னர் பலகத்துறை பிரதேசத்தில் கற்பாறைக்குள் சடலமொன்று சிக்குண்டு இரு கால்கள் வெளியே தெரிந்த நிலையில் கண்டுள்ளனர். பாரிய கருங்கற்களை அகற்றவேண்டியதினால் இச்சடலத்தை உடனடியாக மீட்க முடியவில்லை.
கொச்சிக்கடை பொலிஸார் பிரதேச மக்களின் உதவியுடன் சிறமத்திற்கு மத்தியில் சடலத்தை வெளியே எடுத்து நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தளை, பிலக்வூட் தோட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பரமணியம் யோகேஸ்வரன் எனும் இளைஞரே இந்த பரிதாபகர நிலைக்கு ஆலாகி மரணமடைந்துள்ளார்.
29ம் திகதி வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனை நடாத்தி சடலத்தை உறவினரிடம் கையளிப்பதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment