ராஜாங்க அமைச்சரினால் விடுவிக்கப்பட்ட, சீனப் பிரஜை யார் தெரியுமா..?
சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அறிவித்தலினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 18 ஆம் திகதி துபாயிலிருந்து வருகை தந்திருந்த குறித்த சீனப் பிரஜை, கினி நாட்டு கடவுச்சீட்டினூடாக இலங்கைக்குள் பிரவேசிக்க முயற்சித்த போது போலி கடவுச்சீட்டு என உறுதியான பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
எனினும், அதற்கடுத்த நாள் 19 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ இந்த சம்பவம் தொடர்பில் தலையீடு செய்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி, குறித்த சீனப் பிரஜை தமது அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவித்தார்.
அவரிடமுள்ள சீனக் கடவுச்சீட்டை கவனத்திற்கொண்டு அவரை நாட்டிற்குள் அனுமதிக்க இடமளிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைய விடுவிக்கப்பட்ட குறித்த சீனப் பிரஜை பின்னர் மீண்டும் கடந்த 22 ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தம்மை மீண்டும் சீனாவிற்கு அனுப்புவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் குறித்த சீனப் பிரஜை ரீட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்ததுடன் இது தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்றன.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக்க பண்டார, குறித்த நபர் சீன அரசாங்கத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரென மன்றுக்கு அறிவித்தார்.
இதனிடையே, குறித்த மனுவை மீளப்பெறுவதாக சீனப் பிரஜை சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி இதன்போது தெரிவித்தார்.
குறித்த சீனப் பிரஜை தமது நாட்டில் தேடப்படும் குற்றவாளியென சீனத் தூதரகம் அறிவித்துள்ளதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னர் குறித்த சீனப் பிரஜையை விரைவில் நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அருந்திக பெர்ணான்டோ என்ற நபர் யார் என்பது இங்கு நன்றாகத் தெரிகிறது. உலகப் புகழ் பெற்ற கள்வர்களுடன் தான் இலங்கையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கள்ளக்கூட்டம் தொடர்புகளைப் பேணி கோடான கோடி டொலர்களைக் கொள்ளையடிக்கும் திட்டத்தைச் செயற்படுத்த பொய்யிக்கு மேல் நீதிமன்றத்துக்கும் பொய்யுரைக்கும் இது போன்ற சர்வதேச கள்வர்களை RI சிறைத்தண்டனை வழங்கப்பட வேண்டும். தன் சொந்த பொக்கட்டை நிரப்ப நாட்டின் பெயரையும் நாட்டையும் விற்கும் இது போன்ற பயங்கரவாதக் கள்ளர்களை ஒருபோதும் விட்டுவைக்கக்கூடாது. இந்த நடவடிக்ைகயைச் சரியா மேற்கொள்ளாத வரை இந்த நாட்டுக்கு எந்த முன்னேற்றமும் சரிவரமாட்டாது.
ReplyDelete