இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகை
இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்துவதற்கான சலுகைக்காலத்தினை இந்தியா ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது.
இந்த 1 பில்லியன் கடன் சலுகைக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்திருந்த நிலையில், பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2024 மார்ச் வரை சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது என இலங்கையின் பிரதி திறைசேரி செயலாளர் பிரியந்த ரத்நாயக்க இன்று(09.05.2023) ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
பெற்றுக்கொண்ட கடன் வசதியின் அடிப்படையில் 350 மில்லியன் டொலர் மீதம் உள்ளதாகவும் அதனை தேவைக்கேற்ப பயன்படுத்தப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையின் நிதி நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது இந்தியாவினால் வழங்கப்பட்ட அவசர உதவியில் சுமார் 4 பில்லியன் டாலர்கள் கடன் வரியின் ஒரு பகுதியாகவே இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது.
Post a Comment