தாயாரின் உடலை வெட்டி, பரிசோதனை செய்யாதீர்கள் - மகன் உருக்கமான வேண்டுகோள்
குவைத் நாட்டில் பணிபுரிந்த 50 வயதுடைய பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து 2 வாரங்கள் கடந்துள்ள போதும், இதுவரை அவரது உடல் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தனது தாயாரின் உடலை வெட்டி பரிசோதனை செய்யாமல் பெற்று தருமாறு மகன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாத்தளை - உடஸ்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தாய் கடந்த 07 வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றியதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு வருவதாக கூறியதுடன் அங்குள்ளவர்களிடம் வீடியோ போன் மூலம் பேசிவிட்டு, பின்னர் அவர் பணிபுரிந்த வீட்டில் உயிர்மாய்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், தனது தாயார் இறந்து 2 வாரங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் மகன் கவலை வெளியிட்டுள்ளார்.
Post a Comment