ராஜித்த ஏன் செல்லவில்லை..?
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர், நேற்று -01- கொழும்பு ஏ.ஈ.குணசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற, கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவித்துள்ளன.
எனினும் ராஜித சேனாரத்ன சமுகம் தராமைக்கான காரணம் வெளியாகவில்லை.
Post a Comment