மேல் மாகாணத்தில் பன்றிகளிடையே வைரஸ்
மேல் மாகாணத்தில் பன்றிகளிடையே பரவியுள்ள வைரஸ் நோயானது தொற்றுநோயாக பரவவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என திணைக்களத்தின் பணிப்பாளர், கலாநிதி ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
இந்நோய் மனிதர்களுக்கு பரவும் அபாயம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
பன்றிகளின் சுவாச மண்டலத்தில் ஏற்படும் இந்த வைரஸ் TRRS எனும் பெயரால் அறியப்படுகின்றது.
இந்த நோய்க்கு தேவையான தடுப்பூசிகளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹேமாலி கொத்தலாவல குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment