Header Ads



சந்தேகத்தை கிளப்பும் சஜித், பின்னணி மர்மமாகவே உள்ளதாகவும் தெரிவிப்பு


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக் காலமாக திடீரென மதப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 


இதன் பின்னணி மர்மமாகவே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு - கிழக்கில் இன, மத ரீதியில் தொடரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.


இந்து ஆலயங்கள், விகாரைகள் ஆகியவற்றை வைத்து, அரசியல் நடத்த எவருக்கும் உரித்து கிடையாது. மத ரீதியிலான பிரச்சினைகளை அரசாங்கம் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருடனும் பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.


அதைவிடுத்து பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தால் தீர்வு காண முடியாவிடின் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் ஊடாக நீதியைப் பெற வேண்டும்.


இதில் அரசாங்கத்தின் தலையீடு இருக்கக்கூடாது. அண்மைக்காலங்களாக வடக்கு - கிழக்கில் இன, மத ரீதியிலான பிரச்சினைகள் திடீரென அதிகரித்துள்ளன.


இதன் பின்னணி குறித்து நாம் ஆராய்ந்தபோது, மர்மமாகவே இருக்கின்றது. உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.  Twin

No comments

Powered by Blogger.