Header Ads



ஓடும் பேருந்தில் வலியால் துடித்த கர்ப்பிணி - பிரசவம் பார்த்த நடத்துனர்


பயணித்து கொண்டிருந்த பேருந்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்று கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


ஓடும் பஸ்சில் பிரசவ வலியால் துடித்த, கர்ப்பிணிக்கு, பெண் கண்டக்டர் பிரசவம் பார்த்ததில் பெண் குழந்தை பிறந்தது.


நேற்று மதியம் பெங்களூரில் இருந்து சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் ஒன்று பயணித்து கொண்டுருந்தது. அந்த பஸ்சில் நிறைமாத கர்ப்பிணியும் பயணம் செய்துள்ளார்.


இந்நிலையில் ஹாசன் அருகே உதயபுரா பகுதியில் பஸ் பயணித்து கொண்டிருந்த போது, கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.


அப்பகுதியில் மருத்துவமனை எதுவும் இல்லாத காரணத்தால் பஸ்சை நிறுத்த சொல்லிய பெண் கண்டக்டர் வசந்தம்மா, ஆண் பயணியரை பஸ்சில் இருந்து கீழே இறங்க சொல்லியுள்ளார்.


பின்னர் பெண் பயணியர் உதவியுடன் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த நிலையில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.


அதையடுத்து ஆம்புலன்சில் தாயும், சேயும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிரசவித்த பெண் பொருளாதார ரீதியாக நலிவற்ற நிலையில் இருப்பதை அறிந்த வசந்தம்மா சில பயணியரிடம் இருந்து 1,500 ரூபாயை வாங்கி கொடுத்துள்ளார்.


இந்நிலையில்   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.  

No comments

Powered by Blogger.