பாடசாலைகளுக்கு மாணவர்களின் பெற்றோர் அணிந்துவரும் ஆடைகள் குறித்து பலரும் விசனம்
கொழும்பில் ஆண்கள் பாடசாலையில் மாணவர்களின் பெற்றோர் ஆடைகள் குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பாடசாலையின் முக்கிய கூட்டங்கள், கலந்துரையாடல் மற்றும் பொது நிகழ்வுகளில் தாய்மார்கள் நாகரீகமாக ஆடைகளை அணிந்து வர வேண்டும் என பாடசாலை நிர்வாகத்திால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும் அதனை கண்டுகொள்ள சில தாய்மார்கள், முகம் சுழிக்கும் வகையிலான ஆடைகளுடன் பாடசாலை வளாகத்திற்குள் வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லேகின்ஸ், ரி சேட் போன்ற உடைகளுடன். அதேபோல் தந்தைமாரும் அரை கால்சட்டை, றக்கூட், இறுக்கமான சட்டை போன்ற உடைகளை அணிந்து பாடசாலை அனைத்து நிகழ்வுகளையும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகள் குறித்து அந்த பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகவும் மன வேதனை அடைந்துள்ளனர்.
கீழ்த்தரமான நடந்து கொள்ளும் பெற்றோர்களின் செயற்பாடுகளை, நிகழ்வுகளில் பங்கேற்கும் சில பெற்றோர்களும் விமர்ச்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment