Header Ads



காத்தான்குடி சிறுவனுக்கு குருநாகலில் ஏற்பட்ட துயரம் - ஆத்திரமடைந்தவர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிறுவனம்

குருநாகல் – யந்தம்பலாவ நகரில் 14 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


இந்த சிறுவன் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு தனது மைத்துனரை பார்ப்பதற்காக வந்துள்ளார். மீண்டும் வீட்டிற்கு செல்ல முற்பட்ட வேளையில் அறியாமை காரணமாக தவறான பேருந்தில் ஏறியுள்ளது. இதனையடுத்து, அவர் குருநாகல் நகருக்கு செல்லும் வழியை அறிவதற்காக அருகில் உள்ள நிதி நிறுவனமொன்றுக்கு சென்றபோது, அங்கு பணிபுரிந்த மூன்று ஊழியர்களால் அவர் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பின்னர் சம்பவத்தையறிந்த அப்பகுதி இளைஞர்கள் குத்தகை நிறுவனத்தை சுற்றி வளைத்ததுடன், சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.


எனினும், குறித்த மூன்று சந்தேக நபர்களும் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றிருந்தனர். இந்தநிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


(தினக்குரல்)

No comments

Powered by Blogger.