கொழும்பில் தற்கொலை தாக்குதலுலுக்கு திட்டமிட்டவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
தங்கவேலு நிமலன் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமைக்கமையவே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக வெடிபொருட்கள் மற்றும் 2 மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இரண்டு மைக்ரோ பிஸ்டல்கள், 1 1/2 கிலோ C-4 ரக உயர் வெடிமருந்துகள் மற்றும் தோட்டாக்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பிரதிவாதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பினை அறிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த, பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பினால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குற்றவாளிக்கு கடூழிய வேலையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
Post a Comment