ரணில் பறந்தார், பதில் நிதியமைச்சர் நியமனம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று -04- பிரித்தானியாவிற்கு பயணமானார்.
மே 06 ஆம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் நடைபெறும் மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி பிரித்தானியா சென்றுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது நிதியமைச்சரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment