போன்களை சார்ஜ் செய்து வைக்குமாறு இலங்கையர்களுக்கு அறிவிப்பு
தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மோசமான காலநிலையின் காரணமாக இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்துக்கொள்வதுடன், இயங்கக்கூடிய ஓர் தொலைபேசி தொடர்பு இருந்தால் அனர்த்த நிலைமைகளின் போது உதவும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டின் ஏழு மாவட்டங்களில் 19 பிரதேச செயலகங்களில் சீரற்ற காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதன்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையினால் 428 குடும்பங்களைச் சேர்ந்த 1872 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்த நிலைமைகளின் போது உடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இணைப்பு அவசியம் எனவும், அதனை சார்ஜ் செய்து கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment