பாயப் போகிறாரா ஜோன்ஸ்டன்..? அவரே கூறும் பதில் இதோ...!
இது எமது ஆட்சி. நாம்தான் ஜனாதிபதியை நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உட்பட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிக்கள் சிலர் எதிரணியில் அமரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
நாம் எதிரணியில் அமர்வதற்கு முற்படவில்லை. இது தொடர்பில் வெளியாகும் தகவல் வதந்தியாகும். எம்மை இலக்கு வைத்து திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்படும் செய்தி என்றும் அவர் கூறினார்.
நாம் ஜனாதிபதியொருவரை நியமித்துள்ளோம். அரசின் செயற்பாடுகள் சிறப்பாக இடம்பெறுகின்றன. எனவே எமக்கு அமைச்சு பதவி முக்கியம் அல்ல என்றும் நாட்டின் முன்னேற்றமே முக்கியம் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
இந்த நரித்தந்திரம் கொண்ட மந்தி(ரி)யை ஆயிரம் வருடங்கள் தனிச்சிறையிலடைத்து இந்த உலகில் உள்ள உச்ச தண்டனையை வழங்க இந்த நாட்டில் வாழும் இருநூற்றிஇருபத்திஐந்து மில்லியன் மக்களும் ஒன்றிணைய வேண்டும். இவன் இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் செய்திருக்கும் மிகவும் மோசமான களவுகளும், கொள்ளைகளும், சட்டவிரோதச் செயல்களும் எழுத ஆரம்பித்தால் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட இணையத்தளங்கள் இருந்தாலும் போதாது.
ReplyDelete