அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட முறைப்பாடு
குறிப்பாக விமான நிலையத்தில் உள்ள அதிதிகள் வருகை முனையத்தின் ஊடாக சட்டவிரோதமாக இந்த பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற வரப்பிரசாதங்கள் மற்றும் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளார்.
எனவே,07 மார்ச் 2018 ஆந் திகதி அன்று பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிமுறைகள் இதன் மூலம் முழுமையாக மீறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் கொண்டு வரும் ஆணைகள் மற்றும் விதிகளை நிறைவேற்ற ஆதரவு அளிக்கும் அரசாங்க உறுப்பினர்களாலையே குறித்த அரசாணைகள் மற்றும் விதிகள் மீறப்படுவதற்கு செயற்படுவதானது ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமின்றி,பாராளுமன்றத்தின் ஆளும் எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்கள் மீதும் மக்களின் நம்பிக்கை அற்றுப் போகும்.
இவ்வாறான நிலையில் எதிர்காலத்தில் நாட்டு மக்களும் கூட சட்ட விதிகளுக்கு கீழ்படியாமல் போகலாம்.
இலங்கை சுங்கத்துறையினர் குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து அரசுடமையாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தொடர்பில் நாடாளுமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே,நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் மேற்கொண்டு வரும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களைத் மேலும் முன்னெடுக்காமல் இருக்க இந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இந்தப் பாராளுமன்றம் பிரேரணைப்படுத்துகிறது.
Post a Comment