Header Ads



சிறுமி உயிரிழப்பு


முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்றைய தினம் (26.05.2023) பதிவாகியுள்ளது.


குறித்த சிறுமி பாடசாலை முடித்து மதியம் வீடு வந்த போது அயல் வீட்டுகாரர் விறகுடன் நின்ற தனது லேண் மாஸ்டர் வாகனத்தை பின்னோக்கி எடுக்க முற்பட்டுள்ளார்.


பின்புறம் சிறுமி இருந்ததை அறியாமல் குறித்த நபர் வாகனத்தை பின்னோக்கி செலுத்தியபோது சில்லுக்குள் அகப்பட்டு சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில் சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இதேவேளை வாகனத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments

Powered by Blogger.