Header Ads



சதோச நிகழ்த்திய கொலை - முன்னாள் பணிப்பாளரின் பரபரப்பு குற்றச்சாட்டு


2021 ஆம் ஆண்டு மனித பாவனைக்கு தகுதியற்ற டின் மீன்களை விற்பனை செய்யுமாறு வர்த்தக அமைச்சு, லங்கா சதொச நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன நேற்று குற்றஞ்சாட்டினார்.


துறைமுக அதிகாரசபையால் தடைசெய்யப்பட்ட டின் மீன்களை விற்குமாறு 2021 ஜூலையில் அரசுக்குச் சொந்தமான சதொச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை குணவர்தன வெளியிட்டுள்ளார்.


துறைமுக அதிகாரசபையினால் தடைசெய்யப்பட்ட டின் மீன்களை லங்கா சதொச விற்பனை நிலையம் ஊடாக விற்பனை செய்வதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


“சதொச இலட்சனையுடன் வெள்ளை லேபிளிடுவதன் மூலம் எப்படி சதொச டின் மீன்களை நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் விற்பனை செய்தது. அந்த நேரத்தில் நுகர்வோர் அதிகாரசபை தலையிட்டு விற்பனையை நிறுத்தியது.


ஆனால் வர்த்தக அமைச்சகம் அதை தொடர விரும்பியது. இது அரசு நடத்திய கொலை. சதொசவில் தரமற்ற பொருட்கள் குவிந்து கிடக்கின்றன” என அவர் ட்வீட் செய்துள்ளார்.




No comments

Powered by Blogger.