பிரித்தானிய உள்ளுராட்சி தேர்தலில் இலங்கையர் வெற்றி
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெய்கணேஷ் என்பவர் லேபர் கட்சி மற்றும் லிபரல் கட்சி வேட்பாளர்களை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
இலங்கை, யாழ்ப்பாணத்தில் பிறந்த ஜெய்கணேஷ், லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலையில் சர்வதேச சுற்றுலா தொடர்பில் பட்டப்படிப்பு முடித்தவர் ஆவார்.
Sherborne St John மற்றும் Rooksdown பகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி எனவும், தனக்கு வாக்களித்த மக்களின் நலனுக்காக அக்கறையுடன் செயல்பட இருப்பதாகவும், Basingstoke மற்றும் Deane நகர சபையின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment