Header Ads



ஆதித்யநாத்திடம் மொரகொடவின் கோரிக்கை


உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


இலங்கைக்கும் அயோத்திக்கும் இடையிலான ஆழமான உறவு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான கலாச்சார உறவுகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.


இலங்கையில் இராமாயண காலத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விரிவான கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். 


இதன் மூலம் இந்தியாவின் குடிமக்கள், குறிப்பாக உத்தர பிரதேச மக்கள் இலங்கையில் உள்ள இராமாயண தலங்களைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள்.


இந்த நிலையில் இராமரின் சகோதரன் இலட்சுமணனைக் குணப்படுத்துவதற்காக நடப்பட்ட அனுமான் கொண்டு வந்ததாக கூறப்படும் சஞ்சீவனி மூலிகை செடிகளை உத்தரபிரதேச பெரிய அளவில் நட வேண்டும் என்ற இலங்கை உயர்ஸ்தானிகரின் கோரிக்கையை உத்தர பிரதேச முதலமைச்சர் ஏற்றுக்கொண்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

1 comment:

  1. இலங்கையின் எந்த மூலை முடுக்கையாவது மார்கட் பண்ணி இந்தியாவின் பழைய வரலாற்றுடன் இணைத்து உல்லாசப்பிரயாணத்துறையை விருத்தி செய்ய மிலிந்த மொரகொட செய்யும் முயற்சி முற்றிலும் பாராட்டத்தக்கது. அவருடைய உத்தேச திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுமா அவற்றின் இலக்கை நோக்கி நாட்டின் வாய்ப்புகள் விரிவாக்கப்படுமா என்றால் அதுதான் பெரிய கேள்விக்குறி. எல்லாவற்றுக்கும் சனாதிபதி தலையிட வேண்டும் என்ற நிலை உருவானால் அது மேலும் சிக்கலைத்தான் ஏற்படுத்தும். அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் தற்போது அவர்களுடைய வயிற்றை நிரப்பும் தொழிலைத்தவிர புதிதாக ஏதும் செய்வார்களா என்றால் அதுவும் பெரிய கேள்விக்குறி.

    ReplyDelete

Powered by Blogger.