இறுதி போட்டி நாளைய தினத்திற்கு ஒத்திவைப்பு
இன்று -28- இடம்பெறவிருந்த ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டியை நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவிருந்தன.
இருப்பினும் இன்று மாலை முதல் போட்டி நடைபெறவிருந்த அஹமதாபாத் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டியை நாளைய தினத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத் விளையாட்டரங்கில் நடைபெறும்.
Post a Comment