"பிரபாகரனின் கதையை முடித்தவர்களுக்கு, அமெரிக்கா செய்யும் காரியம்"
புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத்தடை விதித்து வருகின்றது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
“பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய படையினருக்கு அமெரிக்கா தடை விதிப்பது வழமை.
தமது நண்பர் இறந்து விட்டதால் அவர்களுக்கு (அமெரிக்கா) கவலை இருக்கும்.
இதனால் தான், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவைக் கூட அமெரிக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்தது” என்றார்.
Post a Comment